மீனவர்கள் நடுக் கடலில் மோதல்-ஒருவர் பலி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நடுக் கடலில் மீனவர்களில் இரு பிரிவினர் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் ஒருவர் பலியானார். இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவுகிறது.

தூத்துக்குடி அருகே உள்ள மணப்பாடு பகுதியில் நடுக் கடலில் விசைப் படகில் வந்த 7 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நாட்டுப் படகுகளில் பத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.

இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. இதில் அந்தோணிச் சாமி என்ற மீனவர் பலத்த அடிபட்டு உயிரிழந்தார். அவர் விசைப் படகில் வந்த மீனவர் ஆவார்.

இதையடுத்து விசைப் படகு மீனவர்கள் அந்தோணிச்சாமியின் உடலுடன் கரைக்கு விரைந்தனர். அங்குள்ள மீன்பிடி துறைமுகத்திற்கு உடலைக் கொண்டு சென்றனர். தகவல் அறிந்து பெரும் திரளான மீனவர்கள் அங்கு குவிந்தனர்.

தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் ஆம்புலன்ஸை மீனவர்கள் சூழ்ந்து அடித்து உடைத்தனர்.

நிலைமை மோசமானதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் பழனியாண்டி அங்கு வந்தார். மீனவர்களை சமாதானப்படுத்தினார்.

அப்போது மீனவர்கள், நாட்டுப் படகு மீனவர்கள் எங்களுக்கு அடிக்கடி தொல்லை கொடுக்கிறார்கள். இதற்கு முடிவு கட்ட வேண்டும். இல்லாவிட்டால் நாங்களும் பதில் நடவடிக்கையில் இறங்குவோம் என்று ஆட்சித் தலைவரிடம் தெரிவித்தனர்.

பின்னர் இரு தரப்பு மீனவர்கள் பிரதிநிதிகளுடன் ஆட்சித் தலைவர் சமாதானப்பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். இருப்பினும் தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவி வருவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரத்தில் அதிகாரிக்கு அடி:

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இரு தரப்பு மீனவர்களிடையே மோதல் மூண்டது. அவர்களிடம் சமாதானம் பேச வந்த அதிகாரியை மீனவர்களில் ஒரு பிரிவினர் அடித்து உதைத்து, கட்டாயப்படுத்தி மது அருந்தச் செய்ததாக புகார் கூறப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கஞ்சிரங்குடி கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் நாட்டுப்படகுகளில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் விசைப்படகுகளில் சிலர் மீன் பிடிக்க வந்ததால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் 5 விசைப்படகுகளை கஞ்சிரங்குடி மீனவர்கள் பறித்துக்கொண்டு அதில் இருந்தவர்களை விரட்டியடித்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தந்த புகாரின் பேரில் ராமநாதபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் மோகன் தலைமையில் அதிகாரிகள் குழு கஞ்சிரங்குடி சென்றது. அங்கு, மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விசைப்படகுகளை விடுவிக்குமாறு அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து தகராறு எழுந்தது.

சட்டப்படி, 3 கடல் மைல்களுக்கு அப்பால் மட்டுமே விசைப்படகுக்காரர்கள் மீன் பிடிக்க வேண்டும். 3 கடல் மைல்களுக்குள்ளேயே நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடித்துக் கொள்ளலாம். ஆனால் அடிக்கடி தடையைமீறி மீன் பிடிக்க வந்ததால்தான் விசைப்படகுகளை பிடித்து வைத்திருப்பதாக கஞ்சிரக்குடி மீனவர்கள் தெரிவித்தனர். இதற்கு அதிகாரிகள் கூறிய சமாதானம் எடுபடவில்லை.

இந்நிலையில் அதிகாரி மோகனை சிறை பிடித்து வைத்துக் கொண்டு மற்றொரு அதிகாரியான மீன்வள ஆய்வாளர் திருநாவுக்கரசுவை ராமநாதபுரம் கலெக்டர் ஆபிஸுக்குக் கூட்டிச் சென்றனர். அங்கு மீனவர்களை சந்தித்து பேசிய ஆர்.டி.ஓ. பூங்கோதை, தவறு செய்த விசைப்படகுக்காரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அப்போது, தன்னை மீனவர்கள் அடித்துக் கட்டாயப்படுத்தி மது அருந்தச் செய்ததாக ஆர்.டி.ஓ.விடம் திருநாவுக்கரசு புகார் செய்தார். இதை மறுத்த மீனவர்கள், தங்களிடம் பேச வந்தபோதே அவர் நல்ல போதையில் இருந்ததாகக் கூறினர். பின்னர், சிறை பிடித்து வைத்திருந்த அதிகாரி மோகனையும், விசைப் படகுகளையும் மீனவர்கள் விடுவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+