போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட சினிமா லைட்மேன்கள்
சென்னை: காவல் நிலையத்தை சினிமா லைட்மேன்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த போஸ்ராஜ் (45), சினிமா மற்றும் டி.வி. வெளிப்புறப் படப்பிடிப்பு லைட்மேன்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்.
இவர், சென்னை விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில்,
எங்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதில் நான் போட்டியிட உள்ளேன். அது பிடிக்காத சிலர், என்னை மிரட்டுகிறார்கள். சிலர் என்னைத் தாக்க முற்பட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
போலீசார் இந்த மனு மீது விசாரணை நடத்தி நசீர் அகமது என்பவரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஏராளமான லைட்மேன்கள் சங்கத்தினர் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
நசீர் அகமதுவை விடுதலை செய்யக் கோரி கோஷமிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிக்கலை மேலும் வளர்க்க விரும்பாத போலீசார் நசீர் அகமதுவை விடுவித்துவிட்டனர்.
இந்த விவகாரத்தி்ல் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications