விப்ரோ, இன்போசிஸ்சில் மகளிர் தின சிறப்பு திட்டங்கள்
பெங்களூர்: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஐ.டி. துறையில் பெண்கள் சிறப்பான இடத்தைப் பெறுவதற்கான பயிற்சி திட்டங்களை விப்ரோ மற்றும் இன்போசிஸ் நிறுவனங்கள் செயல்படுத்தின.
கடந்த மார்ச் 8ம் தேதியன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெங்களூரில் உள்ள விப்ரோ நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றிய பெண் ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர். 'விமன் ஆப் விப்ரோ' என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
பெண் ஊழியர்களை மட்டும் உறுப்பினர்களாகக் கொண்ட இந்த திட்டத்தின்கீழ் விப்ரோ நிறுவனத்தில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. விமன் ஆப் விப்ரோ உறுப்பினர்கள் 'பசுமைத் தூதர்கள்' என்று அழைக்கப்படவுள்ளனர்.
இன்போசிஸ்:
அதேபோல, இன்போசிஸ் நிறுவனத்தில் 'ஸ்பார்க்' என்ற 2 நாள் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதில் பெங்களூர், புவனேஸ்வர், சென்னை, சண்டீகர், ஹைதராபாத், மங்களூர், மைசூர், புனே மற்றும் திருவனந்தபுரம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு எஞ்சினியரிங் கல்லூரிகளைச் சேர்ந்த 1,200 மாணவிகள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு ஐ.டி. துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு, ஐ.டி. நிறுவனங்கள் நடத்தும் நேர்காணல்களை எதிர்கொள்ளுவிதம் உள்ளிட்ட விஷயங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications