காதல் 'ஸ்பின்'னில் சிக்கிய பதான்!
பரோடா: இந்திய வேகப் பந்து வீச்சாளர் இர்பான் பதான் காதல் வலையில் சிக்கியுள்ளாராம். காதலியுடன் ஆஸ்திரேலியாவில் இன்பச் சுற்றுலாவில் அவர் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
வேகமா இர்பானை, தனது காதல் ஸ்பின்னால் வீழ்த்திய அந்த அழகுப் பெண் ஷிவாங்கி தேவ். கடந்த ஆண்டு ரஞ்சி டிராபி போட்டியின்போதுதான் இர்பானுக்கும், ஷிவாங்கிக்கும் இடையே காதல் இன்னிங்ஸ் தொடங்கியதாம்.
அப்போது பரோடா அணிக்கும், உ.பி. அணிக்கும் இடையே நடந்த போட்டியின்போது பதான் 81 ரன்களை விளாசினார். அப்போது போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த ஷிவாங்கி, பவுன்டரி லைன் வரை வந்து கை தட்டி, உற்சாகமாக பதானைப் பாராட்டினார். அங்குதான் விழுந்து விட்டாராம் பதான்.
தொடர்ந்து இருவரும் அறிமுகமாகி, நட்பை வளர்த்து இப்போது காதலில் முடித்துள்ளனராம். டெஸ்ட் போட்டி போல ஆரம்பித்த இந்த காதல் இப்போது 20-20 வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறதாம்.
ஷிவாங்கி இப்போது இருப்பது ஆஸ்திரேலியாவில். தலைநகர் கான்பெராவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அதிகாரியாக இருக்கிறாராம் ஷிவாங்கியின் அப்பா.
இந்திய அணியின் ஆஸ்திரேலிய பயணம் முடிந்து அனைவரும் நாடு திரும்பிய நிலையில், இர்பான் தனது காதல் தொடரை தொடங்கியுள்ளாராம். ஆஸ்திரேலியாவிலேயே தொடர்ந்து முகாமிட்டு ஷிவாங்கியுடன் காதல் உலா போய்க் கொண்டிருக்கிறாராம்.
இதெல்லாம் உண்மையா என்று பதான்தரப்பில் கேட்டால், அவர்கள் மறுக்கிறார்கள். பதானின் உறவினர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறாராம். அவரைப் பார்க்கத்தான் பதான் ஆஸ்திரேலியாவில் தங்கியிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
மெய்யாலுமா, பதான்?
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications