காங். மீண்டும் ஆட்சிக்கு வரும்-சோனியா: மன்மோகன் சி்ங்குக்கு பாராட்டு

நாடாளுமன்றத் தேர்தல் சீக்கிரமே வரலாம் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. சமீபத்தில் லாலு பிரசாத்தும், ப.சிதம்பரமும் தாக்கல் செய்த பட்ஜெட்டுகள் இதை உறுதி செய்வதாக உள்ளன.
இந்த நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தை டெல்லியில் கட்சித் தலைவர் சோனியா காந்தி கூட்டியுள்ளார். நேற்று வட மாநில காங்கிரஸ் தலைவர்களின் கூட்டம் நடந்தது. இன்று தென் மாநில காங்கிரஸ் தலைவர்களின் கூட்டம் நடந்தது.
இதில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் மற்றும் தென் மாநில காங்கிரஸ் தலைவர்கள், அந்தந்த மாநில பொறுப்பாளர்கள், தென் மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில் ராஜ் தாக்கரேவின் பெயரைக் குறிப்பிடாமல் அவரைக் கடுமையாக தாக்கிப் பேசினார்.
சோனியா பேசுகையில், மண்ணின் மைந்தர் என்ற பிரச்சினையை எழுப்புவது நாட்டைப் பிளவுபடுத்தும் செயலாகும். இதுபோன்ற செயல்களை நாடு ஒரு போதும் அனுமதிக்காது. காங்கிரஸ் கட்சியும் இதைப் பொறுத்துக் கொள்ளாது.
மாநில காங்கிரஸ் தலைவர்கள் இதுபோன்ற பிரிவினைவாதப் போக்கையும், பேச்சையும், செயல்களையும் கடுமையாக கண்டிக்க வேண்டும்.
பிரதமர் மன்மோகன் சி்ங் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். இதனால் காங்கிரஸ் தான் மீன்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றார் சோனியா காந்தி.
வட இந்தியர்களுக்கு எதிரான ராஜ் தாக்கரேவின் செயல்களுக்கு இதுவரை காங்கிரஸ் கட்சி கருத்து எதையும் தெரிவிக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் முதல் முறையாக சோனியா காந்தி அந்தப் பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications