பார்வையற்ற மாணவி அமெரிக்கா செல்ல உதவிய முதல்வர்
சென்னை: அமெரிக்காவில் நடைபெறும் இளம் தலைவர்கள் மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி பங்கேற்கும் வகையில், அவரது பயணம், தங்குமிடம் உள்ளிட்ட எல்லா செலவுகளையும் அரசே ஏற்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
சென்னையில் உள்ள சிறுமலர் பார்வையற்றோருக்கான மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி பினோரா செபின்.
இவர் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடக்கவுள்ள இளம் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள தனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், மாநில மற்றும் தேசிய அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளதாகவும், அமெரிக்க மாநாட்டில் கலந்து கொள்ள தனக்கு வசதி இல்லாததால் நிதியுதவி அளிக்குமாறு முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தார்.
இந்த மனுவை பரிசீலித்த முதல்வர், அந்த மாணவி அமெரிக்காவுக்கு சென்று வருவதற்கான செலவை தமிழக அரசே ஏற்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதற்காக முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து அந்த மாணவிக்கு ரூ.4.7 லட்சம் ஒதுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
துரைமுருகனுடன் ஆலோசனை:
இந் நிலையில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், காலில் அடிபட்டு கடந்த ஒரு வாரமாக ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவமனைக்கு சென்று அவரிடம் கருணாநிதி நலம் விசாரித்தார். இந் நிலையில், நேற்று துரைமுருகன் வீடு திரும்பினார்.
அவரை வீட்டில் போய் சந்தி்த்த கருணாநிதி, ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக பா.ம.கவின் மார்ச் 15 கெடு குறித்து விவாதித்தாகத் தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications