மனைவியை கொன்ற கணவன் கைது
சங்கரன்கோவில்: மலை உச்சிக்கு அழைத்து சென்று மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள நடராஜபுரம் தெருவை சேர்ந்தவர் கண்ணன். தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்களாகிறது.
கவிதா திரூவாரூர் மாவட்டத்தில் நர்சாக வேலை பார்த்து வந்தார். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே வரதட்சனை பிரச்னை தொடர்பாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கண்ணனின் குடும்பத்தினர் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் மலையில் உள்ள காரி சாத்தான் மலையப்பசாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். கண்ணனும் கவிதாவும் சென்றனர்
உறவினர்கள் அனைவரும் கோவிலில் நிழச்சியை முடித்து விட்டு கீழே இறங்கினார்கள். நீங்கள் முதலில் போங்கள் நானும் கவிதாவும் பிறகு வருகிறோம் என்று கூறினார். அவர்களும் சென்றுவிட்டனர். கவிதாவை அழைத்துக் கொண்டு கண்ணன் மலை உச்சிக்கு சென்றார். அங்கு கவிதாவின் தலையில் கல்லை போட்டார். கவிதா அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
அழுதவாறு மலை அடிவாரத்திற்கு ஓடிவந்த கண்ணன், மனைவி கவிதா மலைஉச்சியில் நின்றிருந்தபோது தவறி விழுந்து இறந்துவிட்டாள் என்று கதறினார். இதை நம்பிய அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கரிவலம்வந்தநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து சென்று விசாரனை நடத்தினர். அப்போது கவிதாவின் உடலில் தலையில் மட்டும் காயம் இருந்தது. வேறு எந்த இடத்திலும் காயம் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கவிதாவின் கணவர் கண்ணனிடம் விசாரணை நடத்தினர். அப்போது மனைவியை கொலை செய்ததை கண்ணன் ஓப்புக் கொண்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications