ஊழியர்கள் ஸ்டிரைக் - விமான நிலையங்களில் குப்பைக் குவியல்!
சென்னை: நாடு முழுவதும் விமான நிலைய ஊழியர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தால் குப்பைகள் தேங்கி விமான நிலையங்கள் நாற்றமடிக்கத் தொடங்கியுள்ளன.
ஹைதராபாத், பெங்களூர் விமான நிலையங்களை மூடக் கூடாது, விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் விமான நிலைய ஊழியர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த ேவலைநிறுத்தத்தால் விமானப் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இருந்தபோதும் விமான நிலைய துப்புறவுப் பணிகள் அறவே பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று நள்ளிரவு முதல் தேங்கி வரும் குப்பையால் விமான நிலையங்கள் நாற்றமடிக்க ஆரம்பித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் குளிர்பான பாட்டில்கள், பேப்பர்கள் போன்றவை சிதறிக் கிடக்கின்றன. அவற்றை யாரும் சுத்தப்படுத்தாததால் தேங்கிக் கிடக்கின்றன.
ஹவுஸ் கீப்பிங், தீயணைப்பு, சிவில், எலக்ட்ரிகல், சரக்கு ஊழியர்கள் உள்ளிட்டோர் வேலைநிறுத்தம் செய்து வருவதால் இந்தப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நிலைமை இப்படியே நீடித்தால் விமான நிலையங்கள் இயங்கும், ஆனால் யாரும் உள்ளே போக முடியாத அளவுக்கு நாற்றம் அதிகரிக்கும் நிலை ஏற்படும் என பயணிகள் கூறுகின்றனர்.
தனியார் வசம் உள்ள டெல்லி விமான நிலையத்தில் இந்தப் பிரச்சினை இல்லை. ஆனால் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட அரசு வசம் உள்ள விமான நிலையங்களில் குப்பைக் குவியல் முகம் சுளிக்க வைக்கும் வகையில் உள்ளன.
இன்று காலை சென்னை விமான நிலையத்தில் சில விமானங்கள் வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
-
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications