தமிழகத்தில் இன்றும் நல்ல மழை - 2 நாட்களுக்கு நீடிக்கும்

வங்கக் கடலில், இலங்கைக்கு அருகே 2 நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது நகராமல் அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இன்று 3வது நாளாக நல்ல மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையிலும், புறநகர்களிலும் காலை முதல் விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது.
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீராணம் ஏரி நிரம்பியது. உபரி நீர் வெள்ளியங்கால் கால்வாய் மூலம் திறந்து விடப்பட்டு வருகிறது.
நெய்வேலியில் பெய்து வரும் மழை காரணமாக என்.எல்.சி. சுரங்கத்தில் தண்ணீர் தேங்கி நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய பகுதிகளில் பெய்த மழையால் செங்கல் சூளைகளில் தண்ணீர் புகுந்து பல லட்சம் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியது.
நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மழை தொடர்கிறது. குற்றால அருவிகளில் தண்ணீர் வெள்ளம் போல கொட்டுவதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் மின்னல் தாக்கி ஒருவர் பலியானார்.
தற்போது பெய்து வரும் மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications