சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு: தடை கோரி வழக்கு
மதுரை: பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் கிருஸ்தவர் மற்றும் முஸ்லீம்களுக்கு உள் ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமலன் தனசீலன் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவி்ல்,
நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கிருஸ்தவன். இதுவரை பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிலேயே கிருஸ்தவர்களும், முஸ்லீம்களும் சலுகை பெற்று வந்தனர்.
தற்போது தமிழக அரசு ஓர் அவசர சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. அதன்படி, பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு விகிதாசாரத்துக்குள்ளேயே முஸ்லீம்களுக்கும், கிருஸ்தவர்களுக்கும் 7 சதவீத உள் ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
உண்மையிலேயே, சிறுபான்மையினரின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் விதமாகவே அரசின் இந்த உத்தரவு அமைந்துள்ளது.
குறிப்பாக, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் எங்களுக்குக் கிடைத்துவந்த வேலைவாய்ப்புகள் பெருமளவு பாதிக்கப்படும். கடந்த ஆண்டில் நடந்த செகண்டரி கிரேடு ஆசிரியர் பதவிக்கான நேர்முகத் தேர்வுக்கு எனது பெயரை வேலைவாய்ப்புத்துறையினர் பரிந்துரைத்தனர். ஆனால் இந்த ஆண்டு அதே பணி நியமனத்துக்கு என்னை பரிந்துரைக்கவில்லை.
இதுபற்றி மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரியை அணுகி கேட்டதற்கு, எனது பெயர் தனிப்பட்டியலில் இருப்பதாகவும், அதில் எனது சீனியாரிட்டி 200 பேருக்குப் பின்னால் இருப்பதால் என்னைப் பரிந்துரைக்கவில்லை என்று தெரிவித்தார்.
எனது வாய்ப்பு பறிபோனதற்குக் காரணம் தமிழக அரசு பிறப்பித்துள்ள உள் ஒதுக்கீடு அவசர சட்டம். ஓர் ஒதுக்கீட்டுக்குள் உள் ஒதுக்கீடு செய்தால் இதுபோன்ற பாதகங்கள்தான் ஏற்படும். இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே அரசின் உத்தரவை சட்டவிரோதம் என அறிவித்து ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி கே.வெங்கட்ராமன், சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் இதேபோன்ற வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாவதின் அடிப்படையில் இந்த மனுவை ஏற்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்றார்.
இதையடுத்து இந்த மனு ஒத்திவைக்கப்பட்டது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications