சைக்கிள் தகராறில் 10 வயது சிறுவன் எரித்துக் கொலை
டெல்லி: டெல்லியில், கார் மோதி தனது சைக்கிள் சேதமடைந்ததற்காக நஷ்ட ஈடு கேட்ட 10 வயது சிறுவனை ஒரு கும்பல் எரித்துக் கொடூரமாக கொலை செய்தது.
டெல்லி அருகே உள்ள அலிபூர் என்ற இடத்தில், இந்த சம்பவம் நடந்தது. மீரட்டிலிருந்து ஒரு திருமண கோஷ்டியினர் அலிபூர் வழியாக சென்றனர்.
அப்போது அந்த வழியாக சைக்கிளில் சென்று கொண்டிருந்த 10 வயது சிறுவன் சஞ்சீவ் மீது திருமண கோஷ்டியினரின் ஒரு கார் மோதியது. இதில் சைக்கிள் சேதமடைந்தது. இதையடுத்து சைக்கிளை சரி செய்ய பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளான் சஞ்சீவ்.
இதனால் ஆத்திரமடைந்த, அந்தக் காரில் இருந்து இறங்கிய நான்கு பேர் சஞ்சீவை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அவனை அங்கிருந்து இழுத்துச் சென்றனர். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து சஞ்சீவின் எரிந்து போன உடலை அப்பகுதியினர் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அலிபூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிராம மக்கள் அப்பகுதியில் போராட்டத்தில் குதித்தனர்.
விரைந்து வந்த போலீஸார் இரண்டு டாக்சி டிரைவர்கள் உள்பட 5 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications