ராஜ்யசபா தேர்தல் - ஜெயந்தி நடராஜன் போட்டி

தமிழக ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரு இடங்களில் போட்டியிடுகிறது. இதில் ஒரு இடத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் போட்டியிடுகிறார். அவரது பெயரை காங்கிரஸ் மேலிடம் நேற்று பிற்பகலில் முறைப்படி அறிவித்தது. ஆனால் 2வது வேட்பாளர் பெயரை காங்கிரஸ் வெளியிடவில்லை.
2வது வேட்பாளர் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் 2வது வேட்பாளராக ஜெயந்தி நடராஜன் போட்டியிடுவார் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயந்திக்கு சீட் கிடைத்துள்ளதன் மூலம் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட அனைத்துக் கோஷ்டியினரும் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக கிருஷ்ணசாமி கண்டிப்பாக சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தார். ஆனால் அவருக்கு சீட் நிராகரிக்கப்பட்டு ஜெயந்திக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஜெயந்தி நடராஜன், ஜி.கே.வாசன் ஆகியோர் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.கே.ரங்கராஜனும் நாளையே வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளார். நாளைதான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications