சந்திரிகா தம்பி அனுரா பண்டாரநாயகே மரணம்
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் தம்பியும், முன்னாள் அமைச்சருமான அனுரா பண்டாரநாயகே மரணமடைந்தார்.
இலங்கையின் முதல் பெண் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயகேவின் மகனும், சந்திரிகா குமாரதுங்காவின் தம்பியுமான அனுரா பண்டாரநாயகே முன்னாள் அமைச்சர் ஆவார். அனுராவின் தந்தை சாலமோன் பண்டாரநாயகேவும் பிரதமராக இருந்தவர்.
ஆளும் இலங்கை சுதந்திரா கட்சியின் மூத்த துணைத் தலைவராக இருந்து வந்தார் அனுரா.
சிறிது காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அனுரா, 2 நாட்களுக்கு முன்புதான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று மாலை 4.15 மணியளவில் கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 59.
1977ம் ஆண்டு நுவரேலியா மாவட்டத்திலிருந்து எம்.பியாக ேதர்ந்தெடுக்கப்பட்டு அரசியலுக்கு வந்தார் அனுரா. பல்வேறு அமைச்சர் பொறுப்புகளை வகித்துள்ளார்.
2002ம் ஆண்டு நாடாளுமன்ற சபாநாயகராக பதவி வகித்தார். 2005ம் ஆண்டு சந்திரிகா அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார். பின்னர் ராஜபக்சே அமைச்சரவையில் தேசிய பாரம்பரியத்துறை அமைச்சராக செயல்பட்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அமைச்சர் பதவியிலிருந்து விலகி விட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications