பேராயர் இல்லம் முன் போராட்டம்-திருமாவளவன்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுவை பேராயர் இல்லம் முன் வரும் 19ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
புதுவையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
எறையூரில் அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்த தலித் கிறிஸ்தவர் மீது வன்முறை தாக்குதல் நடந்துள்ளது. இதனால் தலித் மற்றும் கிறிஸ்தவர் இடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு தமிழக அரசும், பேராயரும் தீர்வு காண வேண்டும்.
பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி புதுவையில் பேராயர் இல்லம் முன் வரும் 19ம் தேதி தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக திருமாவளவனை புதுவை-கடலூர் மறைமாவட்ட முதன்மை குரு அந்தோணிசாமி சந்தித்து பேசினார்.












Click it and Unblock the Notifications