இந்தியரைக் கைது செய்து, பெண்ணை அவமானப்படுத்தி சவூதி போலீஸ் அடாவடி
துபாய்: துபாயில் இந்திய கார் டிரைவரைக் கைது செய்தும், அவருடன் பயணித்த பெண்ணிடமிருந்து பர்ஸ், செல்போனைப் பறித்து அவமானப்படுத்திய சவூதி போலீஸார் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
சவூதி ஒழுக்க நெறி கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் போலீஸார்தான் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
சவூதி அரேபியாவின் அல் ஜஹீர் என்ற மாவட்டத்தில், ஒரு காரை நிறுத்திய போலீஸார் அதில் பயணித்த பெண்ணிடம், பொதுமக்கள் முன்னிலையில் பர்ஸைப் பறித்தும், செல்போனைப் பிடுங்கியும் அவமானப்படுத்தினர். அந்தப் பெண் வந்த காரை செலுத்திய இந்திய டிரைவரையும் கைது செய்தனர்.
இருவரும் ஒழுக்க நெறிகளுக்குப் புறம்பாக நடந்து கொண்டதாக போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
அந்தப் பெண் ஒரு மாணவி ஆவார். தனது சகோதரரின் குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக காரில் வந்தார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இந்திய டிரைவர் மீது பெண்ணிடம் கண்ணியக் குறைவான முறையில் நடந்து கொண்டதாக போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
தகவல் அறிந்ததும் அந்த மாணவியின் மைத்துனர் விரைந்து வந்து போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் போலீஸார் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப் போவதாக அவர் எச்சரித்தார்.
ஆனால் போலீஸார் தங்கள் தரப்பில் எந்தத் தவறும் இல்லை என மறுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications