தமிழக அரசு வெப்சைட்டுக்கு விருது
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேசிய அளவில் சிறந்த அரசு இணைய தளத்துக்கான விருது தமிழக அரசின் இணைய தளத்திற்குக் கிடைத்துள்ளது.
சண்டீகரில் 11வது தேசிய இ-ஆளுமை மாநாடு கடந்த மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில் பல்வேறு அரசு இணையதளங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் தமிழக அரசின் இணையதளத்திற்கு சிறந்த அரசு இணையதளத்திற்கான தங்கப் பதக்கம் கிடைத்தது.
விருதினை, மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராசா தமிழக அரசுக் குழுவினரிடம் வழங்கினார்.












Click it and Unblock the Notifications