சட்டசபையில் அதிமுக வெளிநடப்பு
சென்னை: தமிழக பட்ஜெட் உரையை அதிமுக இன்று புறக்கணித்து வெளிநடப்பு செய்தது.
2008-09ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கலானது. இன்று காலை அவை கூடியதும் நிதியமைச்சர் அன்பழகனை பட்ஜெட் தாக்கல் செய்யுமாறு அழைத்தார் சபாநாயகர் ஆவுடையப்பன்.
அப்போது எழுந்த அதிமுக சட்டமன்ற துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கையில் வைத்திருந்த ஒரு பேப்பரைப் படித்தார். ஆனால், அதை சபாநாயகர் அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
இதையடுத்து பேராசிரியர் அன்பழகன் பட்ஜெட் உரையை படிக்க ஆரம்பித்தார்.
அப்போது எழுந்த அதிமுக எம்ஏல்ஏக்கள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், விலைவாசி உயர்ந்துவிட்டதாகவும், பெரும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறி அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வமும், அதிமுக கொறடா செங்கோட்டையனும்,
அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது. ஆனால், திமுக ஆட்சியில் தீவிரவாதம், பயங்கரவாதம், அடிப்படைவாதம் பரவிவிட்டது. விடுதலைப் புலிகள் ஊடுருவலும், கொலைகளும் கொள்ளைகளும் தினசரி சம்பவங்களாகிவிட்டன.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவில் நாட்டிலேயே முதல் மாநிலமாகிவிட்டது தமிழகம்.
அதிமுக ஆட்சியில் மின் வெட்டே ஏற்படவில்லை. ஆனால் இப்போது மாநிலமே இருண்டு கிடக்கிறது. இதனால் தொழிற்சாலைகள், மாணவர்கள், விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இன்னொரு பக்கம் விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர் என்றனர்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications