கர்நாடக எதிர்ப்பை முறியடிக்க ஓகேனக்கல்லில் அனைத்து கட்சி கூட்டம்
பெண்ணாகரம்: ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு கர்நாடக பாஜக எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. அதை முறியடிக்க ஓகேனக்கல்லில் 23ம் தேதி தமிழக அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு கடந்த மாதம் முதலவர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று கர்நாடக பாஜவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 16ம் தேதி கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலைமையில் 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஓகேனக்கலில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் ஓகேனக்கல்லில் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து எஸ்பி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்ட பாஜ விவசாய சங்கத் தலைவர் ஈஸ்வர சந்திரவசமணி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் மாறுகொட்டாய் வழியாக ஓகேனக்கல் பகுதியில் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதனால் ஓகேனக்கல்லில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஓகேனக்கல் இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையில் கர்நாடக பா.ஜவினரை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தர்மபுரி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பிக்கு ஓகேனக்கல் உரிமை பாதுகாப்பு குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கன்னட அமைப்புக்கு பதிலடி கொடுக்க ஓகேனக்கல்லில் வருகிற 23-ந் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்த உரிமை பாதுகாப்பு குழு ஏற்பாடு செய்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications