ஆபாச படம்..செக்ஸ் தொல்லை-கணவன் மீது மனைவி புகார்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: ஆபாசப் படத்தைப் போட்டு அதில் உள்ளது போல நடக்குமாறு கூறி கணவர் தொல்லை செய்வதாக போலீஸில் நெல்லை பெண் புகார் கொடுத்துள்ளார்.
நெல்லையை அடுத்த பேட்டையைச் சேர்ந்தவர் கொலுசு பீவி. இவரது கணவர் அப்பாஸ்.
கடந்த சில மாதங்களாக மது அருந்திவிட்டு, டிவியில் ஆபாசப் படம் போட்டு தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வருவதாக கணவர் மீது நெல்லை போலீஸ் ஆணையர் மஞ்சுநாதாவிடம் கொலுசுபீவி புகார் செய்தார்.
மேலும், ரூ.15 ஆயிரம் கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், அப்பாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு ஆணையர் மஞ்சுநாதா உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications