சொன்னதையே சொல்லியிருக்கிறார்கள்-விஜய்காந்த்
சென்னை: தமிழக பட்ஜெட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தான் தொடர்கின்றன. இதில் புதிய திட்டங்கள் ஏதும் இல்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் உள்ள ஏழைக் குடும்பத்து பிள்ளைகள் பாதியில் பள்ளிப் படிப்பை நிறுத்தி விடுகிறார்கள். அரசு நடத்தும் கிராமப் பள்ளிகள் சரியாக இயங்காததால், பெருமளவிலான பிள்ளைகள் படிப்பறிவு இல்லாதவர்களாக ஆகி விடுகிறார்கள்.
குறிப்பாக, பெண் பிள்ளைகள் பள்ளிக் கூடங்களில் இருந்து நின்று விடுவது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அந்த பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு கொண்டு வரவும், பள்ளியை சிறப்பாக நடத்தவும் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை.
லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்குபெறும் அளவுக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் எந்த சிறப்புத் திட்டமும் இல்லை.
பேறுகாலத்தின் போது இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை குறையவில்லை. ஆயிரம் பிறப்புகளுக்கு குழந்தைகளின் இறப்பு விகிதம் 28 ஆக குறைக்கப்பட வேண்டும் என்று அரசே இலக்கை நிர்ணயித்தது. ஆனால் இன்றும் இது 41 ஆக உள்ளது.
பிரசவ காலத்தில் தாய்மார்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் பட்ஜெட்டில் இல்லை. அதே போல் விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த எந்த செயல்பாடுகளும் இல்லை.
அரசு அமைக்கும் நலவாரியத்தின் மூலம் ஒரு சிலரே நன்மை பெற முடிகிறது. இது தற்காலிக நிவாரணமாகவே அமையும்.
பொதுவாக இந்த பட்ஜெட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவைதான் தொடர்கின்றன. சில நலவாரியங்களை தவிர மக்களுக்கான புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications