ராஜ் டிவியுடன் 'பிக் ஃபிளிக்ஸ்' ஒப்பந்தம்
டெல்லி: இன்டெர்நெட்டில் சினிமா படங்களை வாடகைக்கு விடும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிக் ஃபிளிக்ஸ் போர்டலும், ராஜ் டிவி நிறுவனமும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ரிலையன்ஸ் ஏடிஏஜி நிறுவனத்தின் பிக் ஃபிளிக்ஸ்.காம் போர்டல் தளத்தில், இன்டர்நெட் மூலம் சினிமா படங்களை வாடகைக்கு டவுண்லோடு செய்து கொள்ளலாம். www.broadband.bigflicks.com என்ற முகவரியில் 12 இந்திய பிராந்திய மொழிகளில் 700க்கும் மேற்பட்ட படங்களை பட்டியலிட்டுள்ளது. பிராந்திய மொழி படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் அந்தப் பட வரிசைகளை விரிவுபடுத்த இப்போது பிக் ஃபிளிக்ஸ்.காம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக தமிழில் அதிக படங்களின் வீடியோ உரிமைகளை வைத்திருக்கும் ராஜ் டிவி நெட்வொர்க் நிறுவனத்துடன் பிக் ஃபிளிக்ஸ் போர்டல் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. தங்கள் வசம் ரூ.500 கோடிக்கான படங்களின் உரிமைகள் இருப்பதாக ராஜ் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது. ராஜ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும், சினிமா, செய்தி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அனைத்தையும் இனி பிக் ஃபிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் பார்க்கலாம்.
இதுபற்றி பிக் ஃபிளிக்ஸ் முதன்மை செயல் அதிகாரி கமல் கியான்சந்தனி கூறுகையில், “வெளிநாடுகளில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ராஜ் டிவி நிறுவனத்திடம் ஏராளமான சினிமா, டிவி நிகழ்ச்சிகள், இசை ஆல்பங்களின் தொகுப்புகள் உள்ளன.
ராஜ் டிவி என்ற மெயின் சேனல் தவிர, ராஜ் டிஜிட்டல் பிளஸ் என்ற மூவி சேனல் மற்றும் ராஜ் மியூசிக்ஸ் என்ற இசை சேனலும் உள்ளன.
இந்த சேனல்களை பிக் ஃபிளிக்ஸில் வாடிக்கையாளர்கள் பார்த்து ரசிக்கலாம்.
பிக் ஃபிளிக்ஸ் போர்டலுக்கென இதுவரை 10 லட்சம் பேர் பார்வையாளர்கள் உள்ளனர்.
அகண்ட அலைவரிசை சேவையான பிக் ஃபிளிக்ஸ் போர்டல், வெளிநாட்டு வாழ் இந்தியர்களை குறிவைத்தாலும் இந்தியாவில் அதன் சேவை வழங்கப்படுகிறது.
இந்திய வாடிக்கையாளர்கள் கட்டண அடிப்படையில் சினிமா படங்களை டவுண்லோடு செய்யலாம். இதேபோன்ற ஒப்பந்தத்தை என்டிடிவி, ஜூம், ஸ்டார் டிவி, 7 ஸ்டார் கேர் சேனல் நிறுவனங்களுடன் பிக் பிஃளிக்ஸ் செய்து கொண்டுள்ளது. இந்த சேனல்களை வாடிக்கையாளர்கள் இலவசமாகப் பார்த்து ரசிக்கலாம்" என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications