பிரணாப் முகர்ஜி யு.எஸ். பயணம் - அணு ஒப்பந்தம் குறித்து விவாதம்
டெல்லி: அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க நிர்வாகத்துடன் விவாதிக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அமெரிக்கா சென்றுள்ளார்.
நேற்று இரவு அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்ற பிரணாபுடன், மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர் மேனனும் உடன் சென்றுள்ளார். நாளையும், நாளை மறுநாளும் அமெரிக்க நிர்வாகத்துடன் பிரணாப் முகர்ஜி விவாதிக்கவுள்ளார்.
தனது அமெரிக்க பயணத்தின்போது அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷையும் பிரணாப் முகர்ஜி சந்திக்கிறார். அப்போது இரு தரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கான்டலீசா ரைஸையும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீபன் ஹாட்லிையயும் பிரணாப் சந்திக்கிறார்.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவின் நிலை, சர்வதேச அணு சக்தி முகமையுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அமெரிக்க தலைவர்களிடம் பிரணாப் எடுத்துரைப்பார்.
அணு சக்தி ஒப்பந்தத்தை, அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்க வேண்டும் என இடதுசாரிகள் வலியுறுத்தி வரும் நிலையில் பிரணாப் முகர்ஜியின் அமெரிக்க பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
ஜூலை மாதத்திற்குள் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு இந்தியா உடன்பட வேண்டும் என அமெரிக்கா ஏற்கனவே கெடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்











Click it and Unblock the Notifications