சிபிசிஐடி டிஐஜியாக கருணாசாகர் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சிபிசிஐடி பிரிவு டிஐஜி குணசீலன் மாற்றப்பட்டு, புதிய டிஐஜியாக கருணாசாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிபிசிஐடி பிரிவு டிஐஜியாக இருந்த குணசீலன் மாற்றப்பட்டு அவருக்குப் பதில் கருணாசாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
குணசீலன், நிர்வாகப் பிரிவு டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு ஐஜியாக இருந்த உமாகணபதி சாஸ்திரி, ரயில்வே ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
உமாகணபதி சாஸ்திரி வகித்து வந்த பொறுப்பில் ஐஜி விஜயக்குமார் நியமிக்கப்படுகிறார்.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சம்மேளனத்தின் (ஆவின்) தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரியாக இருந்த டிஐஜி தாமரைக்கண்ணன், பயிற்சிப் பிரிவு டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications