மழையால் பாதித்த மாவட்டங்களில் ஸ்டாலின் சுற்றுப்பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
இன்று காலை விருதுநகர் செல்லும் ஸ்டாலின் அம்மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுகிறார். மாலையில் தூத்துக்குடி மாவட்டம் செல்கிறார்.
நாளை காலை நெல்லை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடும் ஸ்டாலின் 25ம் தேதி ராமநாதரபுரம் மாவட்டம் செல்கிறார் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications