கதிர்காமர் கொலை: பிரபாகரனுக்கு பிடிவாரண்ட்
கொழும்பு: முன்னாள் இலங்கை வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உள்ளிட்டோருக்கு கொழும்பு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
காவல்துறை தலைவர் விக்டர் பெரேரா மூலம் இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி கதிர்காமர் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் பிரபாகரன், பொட்டுஅம்மான், சார்லஸ், மோதி மணிமேகலை, முத்தையன் சகாதேவன், ஆரோக்கியநாதன் மற்றும் வினோதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் சார்லஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விமானப்படைத் தாக்குதலில் பலியானார்.
சமீபத்தில் கதிர்காமர் கொலையில், பிரபாகரன் உள்ளிட்டோர் குற்றவாளிகள் என கொழும்பு நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த நிலையில் பிரபாகரன் உள்ளிட்டோரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு மொத்தம் 51 வழக்குகளில் பிரபாகரனை குற்றவாளி என அறிவித்த கொழும்பு நீதிமன்றம் அவருக்கு மொத்தமாக 200 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது நினைவிருக்கலாம்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications