ஆசிரியர் தாக்கியதில் எஸ்எஸ்எல்சி மாணவி பலி
டெல்லி: டெல்லியில் ஆசிரியர் தாக்கியதால் நினைவிழந்த 10ம் வகுப்பு பள்ளி மாணவி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
டெல்லியின் கோண்ட்லி பகுதியில் உள்ளது தின்கர் மாடல் பள்ளி. இதில் 10ம் வகுப்பு படித்த மாணவி ரிங்கி. தன்னிடம் டியூஷன் கற்றுக் கொள்ள வரவில்லை என்ற கோபத்தில் ரிங்கியை அவளது வகுப்பாசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த ரிங்கி நினைவிழந்தாள். இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 2007ல் நடந்தது. உடனடியாக அருகில் இருந்த மகாராஜா ஆக்ராசென் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள் ரிங்கி. கடந்த 4 மாதங்களாக சிகிச்சையளிக்கப்பட்டபோதும் 2 மாதங்களுக்கு முன்பு கோமா நிலையை அடைந்தாள் ரிங்கி.
இந்நிலையில் நினைவு திரும்பாமலே மருத்துவமனையில் அவளது உயிர் நேற்று பிரிந்தது. சுவாசக்கோளாறு காரணமாக ரிங்கி இறந்ததாக கூறப்படுகிறது.
ரிங்கியை தாக்கிய வகுப்பாசிரியர் மீது அவளது தந்தை நரேஷ்குமார் ஏற்கெனவே புகார் கொடுத்தார். அதன்பேரி்ல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட டெல்லி கல்வித்துறை மந்திரி அரவிந்தர் சிங், மருத்துவமனைக்குச் சென்று ரிங்கியை பார்த்துள்ளார்.
டெல்லி கிழக்கு மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஆர்.என்.சர்மா விசாரித்து தாக்கல் செய்த அறி்க்கையின்பேரில் சம்பந்தப்பட்ட பள்ளியிடம் விளக்கம் கேட்டு கடந்த பிப்ரவரி 20ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவி ரிங்கி உயிரிழந்ததால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications