ஆசிரியர் சேமநல நிதியில் ரூ 6 கோடி மோசடி
Subscribe to Oneindia Tamil
நாகை: ஆசிரியர் சேம நல நிதியில் ரூ.6 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 39 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டம் சீர்காழியில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. அதில் கலந்து கொண்ட அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் அப்துல் மஜித் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் ஐந்து ஆசிரியர் பள்ளிகள் எல்லாம் இரண்டு ஆசிரியர் பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஆசிரியர்கள் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
5,200 ஆசிரியர்களுக்கு 3 மாதம் முதல் 20 மாதம் வரை சம்பளம் வழங்காமல் தமிழக அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் சேமநல நிதியில் ரூ 6 கோடி மோசடி நடந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications