தமிழர் விடுதலை படை மாறனுக்கு 10 ஆண்டு சிறை
சென்னை: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி காவல் நிலையம் மீது குண்டு வீசித் தாக்கிய வழக்கில் தடை செய்யப்பட்ட தமிழர் விடுதலைப் படை தலைவர் மாறன் உள்ளிட்ட 11 பேருக்கு தலா பத்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 1993ம் ஆண்டு குள்ளஞ்சாவடி காவல் நிலையம் மீது குண்டு வீசி பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காவல் நிலையம் பெரும் சேதமடைந்தது. தில்லை கோவிந்தராஜன் என்ற காவலர் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் தடை செய்யப்பட்ட தமிழர் விடுதலைப் படை தலைவர் மாறன் (இவர் வீரப்பன் கும்பலுடன் இருந்தவர்) உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது சென்னை தடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
மாறன் உள்ளிட்ட 11 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறையும், சுந்தரம் என்பவரைத் தவிர மற்ற 10 பேருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி ராமசாமி தீர்ப்பளித்தார்.
இந்த அபராதத் தொகையை வசூலித்து தில்லை கோவிந்தராஜனின் மனைவிக்கு இழப்பீடாக தர வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications