கோவிலில் குடியேறிய நாகம் - பக்தர்கள் பரவசம்
நெல்லை: நெல்லை மாவட்டம் சுரண்டே அருகே கோவிலுக்குள் வந்த நாகத்தைப் பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ளது சோலைசேரி கிராமம். இக்கிராமத்திலிருந்து சுமார் அரை கிமீ தூரத்தில் குளத்தின் கரையை ஓட்டி சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் முருகன் என்பவர் பூசாரியாக உள்ளார்.
சுமார் 6 அடி உயரமுள்ள மண்புற்றுக்கு நடுவே அம்மன்சிலை அமையப் பெற்றுள்ளது. நேற்று முன்தினம் பூசாரி கோவிலுக்குள் காலை பூஜை செய்வதற்காக கர்ப்ப கிரகத்திற்குள் சென்று பூஜை செய்து விட்டு திரும்பியபோது சுமார் 8 அடி நீளமுள்ள நாகபாம்பு படமெடுத்தவாறு வாயில் கதவில் தொங்கி கொண்டிருந்துள்ளது.
அதனை கண்ட முருகன் பயந்து நடுங்கியவாறே சாமி சிலை முன்பு சுமார் 2 மணி நேரம் பூஜை செய்யவே நாகம் இடம் பெயர்ந்துள்ளது. அதன்பின்பு கோயிலுக்குள் நடந்த சம்பவத்தை கிராமத்தில் கூறவே கிராம மக்கள் திரண்டு வந்து பார்த்துள்ளனர். அதன்படியே மீண்டும் அதே நிலையில் நாகம் அம்மன் சிலை முன்பு தொங்கியவாறே இருந்துள்ளது.
இதனால் இரு தினங்களாக கோவிலுக்குள் சென்று கதவை திறந்தால் நாகம் சீறி வருவதால் கோவிலுக்குள் பக்தர்கள் செல்லாமலும், பூஜை செய்ய முடியாமலும் இருந்து வருகின்றனர்.
மேலும் அதே ஊரில் ஒரு வெண்கல சிலை சுமார் அரை அடி உயரத்திற்கு அனாதையாக கிடந்துள்ளது. அதனை கோயிலுக்குள் கொண்டு சென்று பூஜை செய்ய முடியாத நிலையில் பொதுமக்கள் இருந்த போதிலும் பழைமை வாய்ந்த கோயிலுக்குள் நாகம் தோன்றியுள்ளதும், புதிய அம்மன் சிலை கிடைத்துள்ளதாலும் அந்த ஊரில் மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்து அம்மன் அருள் பெற்றுச் செல்கின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications