குஜராத் தொழில் வளர்ச்சி: மோடிக்கு கலாம் பாராட்டு!
வடோதரா: குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்துறை வளர்ச்சிக்கு முதல்வர் நரேந்திர மோடி அரசும், குஜராத் சிறு முதலீட்டாளர்களுமே காரணம் என முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
குஜராத் தொழிலக சம்மேளத்தின் தொழில்துறை விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்கலாம். அப்போது அவர் பேசுகையில், 14 சதவீத தொழில் வளர்ச்சியை அடைய இலக்கு ஏற்படுத்திக் கொண்டு செயல்படுகிறது குஜராத். 11வது திட்ட காலத்தில் இதை சாதிக்க அவர்கள் முனைப்புடன் உள்ளனர். இதன் மூலம் இந்த மாநிலத்தின் தனி நபர் வருமானம் பெருமளவில் உயரும்.
அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சியிலும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதிலும், 51 பொருளாதார மண்டலங்கள் என்று கூறினார்கள், குஜராத் அரசு உயர்ந்த முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தொழில் வளர்ச்சி பெரும் வளர்ச்சி அடையும். வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் கவரும். ஏராளமான வேலை வாய்ப்புகளை மக்களுக்குக் கொடுக்கும்.
குஜராத்துக்குள்ளேயே நல்ல தொழில் போட்டி நிலவுகிறது. இதனால் பலன் கிடைக்கப் போவது இந்த மாநில மக்களுக்கும், மாநில நலனுக்கும்தான்.
குஜராத்தில் உள்ள அனைத்து சிறிய, பெரிய, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை நாட்டின் பிற தொழில் நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்து செயல்பட்டால், மிகப் பெரிய வளர்ச்சியை அடைய முடியும்.
2020ம் ஆண்டு வாக்கில் இந்தியா மிகப் பெரிய வளர்ச்சி அடைந்த, பாதுகாப்பான, தீவிரவாத அச்சமற்ற, அமைதியான வல்லரசாக மாறி விடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் கலாம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications