காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்!
காரைக்குடி: காரைக்குடியில் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்குடிக்கு வரும் 5 ம் தேதி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வருகையை முன்னிட்டு உயர் போலீஸ் அதிகாரிகள் காரைக்குடி காவல் நிலையத்தில் ஆலோசனை நடத்திக் கொண்டு இருந்தனர்.
அப்போது காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்கு புகாரோடு ஒரு இளம் பெண் வந்தார். இன்ஸ்பெக்டரை பார்த்து புகார் மனு கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
சோனியா காந்தி வருகிறார். அதனால் அது குறித்த பாதுகாப்பு ஆலோசனையில் உள்ளோம். எனவே 5 ம் தேதிக்கு பிறகு வந்து மனு கொடுத்தால் அந்த புகார் மனு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.
இந்த பதிலில் திருப்தி அடையாத அந்த இளம் பெண் தான் கொண்டு வந்திருந்த மாத்திரைகளை வாயில் போட்டு போலீஸ் நிலையத்தில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அதை பெண் மாத்திரை சாப்பிடுவதை தடுத்து காப்பாற்றினர்.
பின்பு அந்த பெண்ணின் உறவினர்களை வரவழைத்து சமாதானம் பேசி அனுப்பிவைத்தனர். இதனால் காரைக்குடி காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சோனியாவின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதிகாரிகள், சாதாரண பெண்ணின் பிரச்சினைக்கும் உரிய முக்கியத்துவம் கொடுத்திருக்கலாமே.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications