ஓகனேக்கல் திட்டத்துக்கு 98லேயே கர்நாடகம் ஒப்புதல்: தலைமைச் செயலர்
சென்னை: ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு 1998ம் ஆண்டே கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி திரிபாதி தெரிவிக்கையில், டெல்லியில் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பாக 1998ம் ஆண்டு டெல்லியில் ஒரு கூட்டம் நடந்தது.
அதில், கர்நாடக அரசின் சார்பில் அப்போதையை தலைமைச் செயலாளர், பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவு நீர் வாரியத் தலைவர், தொழில்நுட்ப ஆலோசகர் ஆகியோர் அடங்கிய குழு கலந்து கொண்டது.
தமிழகத்தின் சார்பில் அப்போதைய பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அக்கூட்டத்தில் குடிநீர்த் திட்டத்திற்கு அதிக முன்னுரிமை தர வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு கர்நாடகமும் ஒப்புதல் அளித்தது.
இந்தத் திட்டம் திட்டமிட்டபடி நிறைவேற்றப்படும். காவிரியில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அளவு நீரைத்தான் நாம் பயன்படுத்தப் போகிறோம். கூடுதலாக ஒரு சொட்டு நீரைக் கூட கேட்கப் போவதில்லை.
கடந்த 1999ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி மத்திய அரசு ஒரு ஆட்சேபனை இல்லை சான்றிதழை வெளியிட்டது. அதில், இத்திட்டத்திற்காக காவிரியிலிருந்து 1.4 டிஎம்சி தண்ணீரை தமிழகம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்குத் தேவையான தண்ணீர் காவிரியின் இடது கரையில் உள்ள குத்தப்பாடி கிராமத்திலிருந்துதான் எடுக்கப்படும். இது முற்றிலும் தமிழகத்திற்குள் உள்ள பகுதியாகும்.
கர்நாடக வன்முறை தொடர்பாக கர்நாடக அரசுடன் நாம் தொடர்பு கொண்டிருக்கிறோம். நிலைமை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்றார் திரிபாதி.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications