சட்டசபையில் அதிமுக வெளிநடப்பு
சென்னை: தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை குறித்து பேச கூடுதல் நேரம் தராததால், துணை சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இன்று அதிமுக வெளிநடப்பு செய்தது.
சட்டசபையில் இன்று அதிமுக உறுப்பினரும், முன்னாள் போக்குவரத்து அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் மின் பற்றாக்குறை குறித்துப் பேசினார். ஒரு கட்டத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டதாக துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி தெரிவித்து அமருமாறு கூறினார்.
ஆனால் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் எழுந்து விஸ்வநாதன் தொடர்ந்து பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை துணை சபாநாயகர் ஏற்கவில்லை.
இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக மின்துறை மானியக் கோரிக்கை மீது நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், தமிழகத்தின் மின் திட்டங்கள் குறித்து திமுக அரசு தவறான தகவல்களை மக்களுக்குக் கொடுத்து வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில்தான் பல புதிய மின் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
தற்போது தமிழகத்திற்கு, அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள 15 லட்சம் டன் நிலக்கரிக்குப் பதிலாக, 25 சதவீதம் குறைநத அளவிலான நிலக்கரியையே மத்திய அரசு வழங்குகிறது. இதனால் பெரும் பணத்தை செலவு செய்து வெளியிலிருந்து இறக்குமதி செய்கிறது அரசு. இதனால் மக்கள் வரிப்பணம்தான் வீணாகிறது.
இந்த விஷயத்தில், மத்திய அரசிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, முழு அளவில் நிலக்கரியை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்றார்.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications