இலங்கை துணைத் தூதருக்கு எதிராக போராட்டம்-சுப.வீ
சென்னை: சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதர் அம்சாவை வெளியேற்றக் கோரி விரைவில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய வானொலிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
சென்னையில் இலங்கை துணைத் தூதுவரான அம்சா, தமிழ்நாட்டில் அமர்ந்துகொண்டு எத்தனை குழப்பங்களைச் செய்ய முடியுமோ அத்தனை குழப்பங்களையும் முறையற்ற வழிகளிலே செய்து கொண்டிருக்கிறார்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக நடைபெற்ற ஏறத்தாழ 5 ஆயிரம் பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், வாரந்தோறும் பத்திரிகையாளர்களை அழைத்து விருந்து என்ற பெயரில் தகாத முறையில் லஞ்சம் கொடுத்து, பத்திரிகையாளர்களின் கண்ணியத்தையும் குறைத்து பொய்யான செய்திகளை வெளியிட அம்சா ஏற்பாடு செய்கிறார் என்று சொல்லியிருந்தார்.
ஒருமுறை தமிழக முதல்வர் கலைஞரை நான் சந்தித்தபோதுகூட அம்சாவை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நீங்கள் டெல்லிக்கு வலிமையாக முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
ஒரு பொது ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் இந்தக் கருத்தை வலியுறுத்திப் பேசினார்.
அம்சா என்கிற அந்த நபர் இங்கே அமர்ந்து கொண்டு எல்லாவித கண்ணியமற்ற- முறைகேடான செயல்களையும் செய்கிறார். உண்மைக்கு மாறான செய்திகளை தமிழகத்திலே பரப்ப முயற்சிக்கிறார்.
எனவே அம்சாவுக்கு எதிராக ஒரு மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை மிக விரைவில் நடத்த தமிழகத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும் முடிவெடுத்திருக்கிறோம். அதற்கான முயற்சிகளையும் நாங்கள் இப்போது மேற்கொண்டிருக்கிறோம் என்றார் சுப.வீரபாண்டியன்.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை












Click it and Unblock the Notifications