தென் மாவட்டங்களில் பாதுகாப்பு-கண்காணிப்பு அதிகரிப்பு
மதுரை: கர்நாடக வன்முறையைக் கண்டித்து தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் போலீஸ் கண்காணிப்பும், பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்ைத எதிர்த்து கர்நாடகவில் கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைக் கண்டித்து தமிழகத்திலும் போராட்டங்கள் சூடு பிடித்துள்ளன.
கன்னட அமைப்பினருக்குப் போட்டியாக தமிழகத்திலும் பஸ்கள் உடைப்பு, கன்னட சங்கங்கள் மீது தாக்குல், ஹோட்டல்கள் மீதுதாக்குதல் என போராட்டம் வெடித்துள்ளது.
மதுரையில், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள கர்நாடக மாநில அரசுப் போக்குவரத்துக் கழக புக்கிங் அலுவலகத்தை பூட்டி, ஊழியரை சிறை வைத்து வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னடர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பதட்டமான பகுதிகளில் 24 மணி நேர ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் போலீஸ் படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்குக்கு பங்கம் ஏற்படாத வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக புக்கிங் அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
மைசூர் செல்லும் தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications