ஷார்ஜாவில் கலவரம் - 600 இந்தியர்கள் கைது
ஷார்ஜா: ஷார்ஜாவில் 600க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் திடீரென கல்வீச்சு மற்றும் கலவரத்தில் இறங்கினர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்து 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷார்ஜாவில் உள்ள டைகர் கான்ட்ராக்ட் கம்பெனியின் மூலம் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அனைவரும், சமீபத்தில் ஒரு தங்குமிடத்திற்கு மாற்றப்பட்டனர். அந்தக் கட்டடம் இன்னும் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை.
இதனால் தங்களால் அங்கு தங்க முடியாது என்று தொழிலாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதை அவர்களது முகாம் அதிகாரி கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து அனைத்துத் தொழிலாளர்களும் போராட்டத்தில் குதித்தனர்.
துபாய் - ஷார்ஜா நெடுஞ்சாலையில், அல் நஹ்தா என்ற இடத்தில் திரண்ட அவர்கள் கல்வீச்சில் இறங்கினர். சாலையில் சென்ற வாகனங்கள் மீதும் கற்கள் வீசித் தாக்கப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் 600க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்னர்.
மொத்தம் 800 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பலர் தங்களது முகாமுக்குள் இருந்தபடி போராடினர். மற்றவர்கள்தான் சாலைக்கு வந்து கலவரத்தில் ஈடுபட்டனர். மொத்தம் 625 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஷார்ஜா போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதலில் 15 தொழிலாளர்களுக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் ஷார்ஜாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கலவரம் பெரிதாகாமல் தடுக்க துபாய், அபுதாபி யிலிருந்து கலவரத் தடுப்புப் போலீஸார், சிறப்புப் பாதுகாப்புப் படையினரும் வரவழைக்கப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications