ஓகேனக்கல்: ஏப். 15ல் சிபிஐ ஆதரவு பந்த்
தர்மபுரி: தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் வரும் 15ம் தேதி ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் செய்ய இந்திய கம்யூனிஸ்டு கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
தர்மபுரி-கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று தர்மபுரியில் நடந்தது. மாவட்ட செயலாளர் இளம்பரிதி தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் நாகராஜ ரெட்டி உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
மத்திய அரசின் ஆதரவோடு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது. குடிநீரில் புளோரைடு, நைட்ரேட் போன்ற நச்சுப்பொருட்களால் பாதிக்கப்படும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களை காப்பாற்றுவதற்கு 25 ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு இந்த திட்டம் செயல் வடிவம் பெற்றுள்ளது.
தேர்தல் ஆதாயத்துக்காக கர்நாடக அரசியல் கட்சிகள் இனவெறியை தூண்டி விடுகின்றன. இது தமிழர்-கன்னடர் இன மோதலாக மாறி உள்ளது. இதனால் பெங்களூரில் வசிக்கும் தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.
ஓகேனக்கல் திட்டத்தை தடுக்கவும், தாமதப்படுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன. இப்போக்கை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் உரிமையை பாதுகாக்கவும், ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவும் மாநில அரசுக்கு பொறுப்பு உள்ளது. இதில் மத்திய அரசின் மவுனம் கண்டிக்கத்தக்கது.
எனவே தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் வரும் 15ம் தேதி ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications