கணவர் இறந்ததாக கூறி பணிக்கொடையை பெண் 'லபக்'
நெல்லை: கணவர் இறந்துவிட்டதாக கூறி போலி இறப்புச் சான்றிதழ் கொடுத்து கருணைத் தொகையை ஏப்பம்விட்ட மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மில்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி அமிர்தகனி. ஜெயபால் அங்குள்ள கூட்டுறவு மில்லில் வேலை செய்தார். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரி்ந்து வாழ்கின்றனர்.
ஜெயபால் தற்போது கோவையில் உள்ள மில்லில் பணியாற்றுகிறார். தனது கணக்கில் கடன் கேட்டு பிஎப் அலுவலகத்தை ஜெயபால் அணுகியுள்ளார். ஆனால், ஜெயபால் இறந்துவிட்டதாகக் கூறி அவரது மனைவி அமிர்தகனி மொத்த பணத்தையும் ஏற்கெனவே வாங்கிவிட்டதாக அதிகாரிகள் கூறியதால் அதிர்ச்சியடைந்தார்.
போலி இறப்பு சான்றிதழ் மூலம் ஜெயபாலின் பிஎப் பணம் ரூ.30,550 மற்றும் பணிக்கொடை ரூ.48,000த்தையும் அமிர்தகனி பெற்றுக் கொண்டது இதன்மூலம் தெரிந்தது.
இந்த மோசடி குறித்து நெல்லை பிஎப் துணை மண்டல அலுவலகத்திலும், போலீஸ் கமிஷனரிடமும் ஜெயபால் புகார் செய்தார். இதையடுத்து அமிர்தகனி மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications