தொண்டு நிறுவனத்துக்கு நிலம் தந்தது செல்லும்- ஐகோர்ட்
சென்னை: தனியார் தொண்டு நிறுவனத்துக்கு புறம்போக்கு நிலத்தை தமிழக அரசு குத்தகைக்கு வழங்கியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை முகப்பேரில் நேத்ரோதயா அறக்கட்டளை உள்ளது. வாடகை கட்டடத்தில் இந்த அறக்கட்டளை செயல்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் நொலம்பூர் கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் பார்வையற்ற மாணவர்களுக்கான இல்லத்தை அமைக்க நிலத்தை இலவசமாக வழங்க தமிழக அரசிடம் இந்த அறக்கட்டளை விண்ணப்பித்தது.
இதன்அடிப்படையில் அந்த பகுதியில் உள்ள நிலத்தை நேத்ரோதயா அறக்கட்டளைக்கு கடந்த 2006ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி வருவாய்த்துறையினர் வழங்கினர்.
30 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட இந்த நிலத்துக்கு ஆண்டு வாடகையாக ரூ.5,000த்தை தொண்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் அரசு உத்தரவி்ல் தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, திருவள்ளூர் மாவட்டம் ஊராட்சி கவுன்சிலரும் மேற்கு முகப்பேர் கார்டன் குடியிருப்போர் நலச் சங்க செயலாளருமான இமானுவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தார்.
சட்டவிரோதமாக நேத்ராலயா தொண்டு நிறுவனத்துக்கு அரசு புறம்போக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக அரசு வெளியிட்ட உத்தரவை ரத்து செய்து நிலத்தை ஒப்படைக்குமாறு தொண்டு நிறுவனத்துக்கு உத்தரவிடவேண்டும் என்று அந்த மனுவில் இமானுவேல் குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதி பால் வசந்தகுமார் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், மனுதாரர் இப்போது கவுன்சிலராக உள்ளார். அவரே அரசின் கொள்கைகளை மதிக்காமல் நடக்கிறார். தொண்டு நிறுவனத்துக்கு நிலம் வழங்கியதற்கு ஆட்சேபங்களைத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு ஏ-1 நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதையடுத்து தாசில்தார் தலைமையில் விசாரணை நடத்தியபிறகே நிலம் ஒதுக்கப்பட்டது. அப்போதெல்லாம் இந்த மனுதாரர் கருத்து கூறவில்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டபிறகு நீதிபதி பால் வசந்தகுமார், மனுதாரர் வழக்கில் எந்த பொதுநோக்கமும் இல்லை. அவர் கவுன்சிலராக இருந்தும் அரசின் கொள்கைகளை ஆதரிக்காமல், ஒரு நல்ல நோக்கத்துக்காக நிலம் வழங்கியதை எதிர்த்துள்ளார்.
எந்த முகாந்திரமும் இல்லாமல் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். தொண்டு நிறுவனத்துக்கு நிலம் வழங்கியதை அந்தப் பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications