80 வயது பாட்டி கற்பழிப்பு - காமக் கொடூரனுக்கு வலை!
Subscribe to Oneindia Tamil
சத்தர்பூர் (ம.பி.): மத்தியப் பிரதேச மாநிலத்தில் 80 வயது மூதாட்டி கற்பழிக்கப்பட்ட கொடுமை நடந்துள்ளது.
சத்தர்பூர் மாவட்டம் பந்திகலா என்ற கிராமத்தில்தான் இந்த அநியாயம் நடந்துள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பாட்டி சனிக்கிழமை இரவு வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்கப் போயுள்ளார்.
அப்போது அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க நபர், பாட்டியை பலவந்தப்படுத்தி கற்பழித்து விட்டார். இதில் அந்தப் பாட்டி மயக்கமடைந்து விட்டார்.
கவலைக்கிடமான நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமறைவாகி விட்ட அந்த காமக் கொடூரனை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications