திடீரென வீட்டை இடித்த உரிமையாளர்-2 பேர் படுகாயம்
சென்னை: சென்னையில் முன்னறிவிப்பின்றி வீட்டை உரிமையாளர் இடித்ததால் அதில் குடியிருந்த 2 பேர் படுகாயமடைந்தனர். மற்றவர்கள் அலறி அடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ராயுபரத்தில் செல்வம் என்பவருக்குச் சொந்தமாக 2 மாடிகளைக் கொண்ட வீடு உள்ளது. இங்கு மொத்தம் 19 வீடுகள் உள்ளன. இந்த வீட்டு வளாகம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
இந்த நிலையில் வீடுகளை இடித்து புதுப்பித்துக் கட்ட செல்வம் முடிவு செய்தார். ஆனால் வீட்டில் குடித்தனம் இருப்பவர்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் இன்று காலை இடிப்புப் பணியைத் தொடங்கினார்.
வீட்டை இடித்தபோது, பால்கனி இடிந்து பயங்கர சப்தத்துடன் விழுந்தது. இதில் சிக்கி சிறுவன் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
வீடுகளின் இடிபாடுகளில் 7 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களை தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து பத்திரமாக மீட்டனர்.
வீடு இடிக்கப்படுவதை அறிந்து வீடுகளில் குடியிருந்தவர்கள் அலறி அடித்து வெளியேறினர்.
போலீஸாருக்கும் தகவல் பறந்து அவர்கள் விரைந்து வந்தனர். குடித்தனக்காரர்களை வெளியேற்றாமல் வீடுகளை இடித்ததற்காக செல்வத்தை போலீஸார் கண்டித்தனர்.
-
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications