சென்னை-கோவை-பெங்களூர் புல்லட் ரயில் இயக்க திட்டம்

மும்பை- புனே, மும்பை- அகமதாபாத், சென்னை- கோவை- பெங்களூர்- எர்ணாகுளம், டெல்லி- அமிர்தசரஸ், ஹவ்ரா- ஹால்டியா ஆகிய 5 முக்கிய வழித் தடங்களில் முதல் கட்டமாக புல்லட் ரயில் திட்டத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆகஸ்ட் மாதம் ஆய்வு நடத்தப்பட இருப்பதாக ரயில்வே வாரியத் தலைவர் கே.சி.சேனா தெரிவித்தார். புவனேஸ்வரத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இந்தியாவில் அதிவேக புல்லட் ரயில்களை விட பயணிகளிடமிருந்து கோரிக்கை வலுத்து வருகிறது. மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் புல்லட் ரயில் திட்டத்துக்கான வாய்ப்பு குறைவு.
ஆனாலும் புல்லட் ரயில் திட்டத்தை அமல்படுத்த சில மாநில அரசுகள் ஆர்வமாக உள்ளன. ஆகவே முதல் கட்டமாக புல்லட் ரயில் திட்டத்தை 5 முக்கிய வழித்தடங்களில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
வருகிற ஆகஸ்ட் மாதம் இதற்காக உலகளாவிய டெண்டர்' விடப்படுகிறது. இந்த ஆய்வுக்கான நிதியை அளிக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தயாராக உள்ளன.
பணிகளுக்கான டெண்டர்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் செப்டம்பர் மாதத்தில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம். உலக அளவில் தைவான் அதிவேக கார்ப்பரேஷன்' நிறுவனம்தான் தற்போது புல்லட் ரயில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
புல்லட் ரயில் பாதை அமைக்க ஒரு கி.மீ. தூரத்துக்கு ரூ.600 கோடி செலவாகும். இதை தனியார் ஒத்துழைப்புடன்தான் செயல்படுத்த முடியும். சாதாரண மக்களுக்குக் கட்டுப்படியாகாத அளவுக்கு புல்லட் ரயில் கட்டணம் மிகவும் அதிகமாக இருக்கக்கூடும் என்றார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications