காதலன் தூக்குப் போட்டு தற்கொலை-காதலி தீக்குளித்து சாவு!
புதுச்சேரி: காதலனின் மறைவுத் துயரை தாங்க முடியாத இளம் பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி அருகே வில்லியனூரில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
வில்லியனூர் கன்வாய்ப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் (23). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான ராஜேஸ்வரியும் காதலித்து வந்தனர்.
இது ராஜலிங்கத்தின் குடும்பத்தினருக்குத் தெரிய வந்தது. ராஜேஸ்வரி வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்று கூறி காதலுக்குத் தடை விதித்தனர். இதனால் மனம் உடைந்த ராஜலிங்கம் 2 நாட்களுக்கு முன்பு தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். நேற்று மாலை அவரது உடல்தகனம் செய்யப்பட்டது.
ராஜலிங்கம் இறந்தது முதல் ராஜேஸ்வரி பெரும் சோகத்தில் மூழ்கியிருந்தார். நேற்று ராஜலிங்கம் வீட்டுக்குச் சென்று அவரது உடலைப் பார்த்துக் கதறி அழுதார்.
பின்னர் வீடு திரும்பிய அவர் ராஜலிங்கத்தின் நினைவை மறக்க முடியாமல் வீட்டில் தீக்குளித்தார். உடல் கருகிய நிலையில் அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார் ராஜேஸ்வரி.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications