தமிழகம்-கர்நாடகா பஸ் போக்குவரத்து துவங்கியது
ஓசூர்: ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னட அமைப்பினர் தமிழக எல்லைக்குள் அத்துமீறி, கடந்த ஒரு மாதமாக போரட்டங்கள் நடத்தினர்.
தமிழகத்திலும் அதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால், கர்நாடகா-தமிழக எல்லையில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. தமிழக பஸ் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன.
இதைக் கண்டித்து ஓசூரில் கர்நாடக பஸ் தீவைத்து எரிக்கப்பட்டதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இருதரப்பிலும் ஏற்பட்ட பதற்றத்தினால் கடந்த 5 நாட்களாக தமிழ்நாடு அரசு பஸ்களை கர்நாடக போலீசார் எல்லையிலேயே தடுத்து நிறுத்தினர்.
சனி, ஞாயிறு, திங்கள்கிழமை யுகாதி என விடுமுறைக்குச் சென்ற தமிழக சாப்ட்வேர் ஊழியர்கள் பெங்களூருக்குத் திரும்ப முடியாமல் அவதிக்குள்ளானார்கள்.
இந்தநிலையில் ஒகேனக்கல் குடிநீர் திட்டப்பணியை கர்நாடக தேர்தல் முடியும் வரை ஒத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து பதற்றம் குறைத் தொடங்கியது. கன்னட அமைப்புகளும் அடக்கி வாசிக்கத் தொடங்கின.
இரு மாநிலங்களிலும் இயல்பு நிலை திரும்பியது.
இதையடுத்து இரு மாநில போலீசாரும் பாதுகாப்பு பணிகள் குறித்து நேற்று ஆலோசனை நடத்தினர். முதற்கட்டமாக, சரக்கு லாரிகள் இயக்கப்பட்டன.
அரசு பஸ்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதாக, இரு மாநில போலீசாரும் உத்தரவாதம் கொடுத்ததால், துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் மூன்று அரசு பஸ்களை தமிழக போலீசார் ஓசூரில் இருந்து பெங்களூரு வரை இன்று அனுப்பி வைத்தனர்.
அந்த பஸ்கள் பயணிகளை இறக்கி விட்டு, ஓசூர் பஸ்நிலையத்துக்கு பத்திரமாகத் திரும்பி வந்தன. இதையடுத்து, இரு மாநிலங்கள் இடையே அரசு, தனியார் விரைவு பஸ்கள், டவுன் பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications