இலங்கையில் பிரபாகரன் பிறந்த வீட்டுக்கு சிங்கள ராணுவம் காவல்

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பூர்வீக வீடு, இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள வல்வெட்டித்துறை கடலோர கிராமத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்துதான் தனி ஈழப் போராட்டத்தை பிரபாகரன் தொடங்கினார்.
சிங்கள ராணுவத் தாக்குதலுக்கு பயந்து பெரும்பாலான மக்கள் இந்த கிராமத்தைவிட்டு வெளியேறி வேறு இடங்களில் குடியேறிவிட்டனர். பிரபாகரன் உறவினர்கள் உள்ளிட்ட சில குடும்பங்கள் மட்டுமே அங்கு தொடர்ந்து வசித்து வருகின்றனர்.
பிரபாகரனின் வீடு உள்பட வல்வெட்டித்துறை பகுதி முழுவதும் இப்போது இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இந்த வீடு உள்பட தமிழர்களின் அடையாளங்களாகக் கருதப்படும் எல்லா இடங்களையும் இலங்கை ராணுவத்தினர் அழித்து வருவதாகவும், இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை முற்றிலும் அழித்தொழிக்க முயற்சிப்பதாகவும் கடந்த மாதம் பிரபாகரன் குற்றம் சாட்டியிருந்தார்.
இந் நிலையில் இலங்கை ராணுவத்தை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
"பிரபாகரன் வாழ்ந்த வீட்டை அழிக்கும் எண்ணம் இலங்கை அரசுக்கு இல்லை. இந்தப் பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்ததில் இருந்து அவரது வீட்டை எந்த சேதமும் ஏற்படாதவண்ணம் பாதுகாத்து வருகிறோம்.
புலிகள் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இந்த வீட்டை சேதப்படுத்த முயற்சிக்கலாம் என்பதால், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். யாராலும் சேதப்படுத்த முடியாத அளவுக்கு பிரபாகரனின் வீடு பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது" என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications