தென் மாவட்டங்களில் பல மணி நேரம் கன மழை
மதுரை:சிறிய இடைவெளிக்குப் பின்னர் தென் மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்துள்ளது. நேற்று பல்வேறு மாவட்டங்களில் பல மணி நேரம் மழை கொட்டித் தீர்த்தது.
வழக்கமாக கோடை காலத்தில் அடை மழை பெய்யாது என்பார்கள். ஆனால் இந்த ஆண்டு ஏறுக்கு மாறாக, வெயில் ஒருபக்கம் அடித்து வெளுத்துக் கொண்டுள்ள நிலையில் மறுபக்கம் மழையும் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது.
கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் தென் மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. வட மாவட்டங்களிலும் மழைக்குத் தப்பவில்லை.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மழை இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று தென் மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது.
மதுரையில், பிற்பகல் ஒரு மணி நேரம் கன மழை விளாசித் தள்ளியது.
இதனால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் என ஓடியது.
நெல்லை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் நேற்று மதியத்திற்கு மேல் கன மழை பெய்தது. விக்கிரமசிங்கபுரம், பணகுடி, களக்காடு, சேரன்மாதேவி ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்தது.
குற்றாலம் அருவிகளிலும் சீசன் காலத்தில் வருவதைப் போல தண்ணீர் கொட்டியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மழை கொட்டித் தீர்த்தது.
ராமநாதபுரத்தில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை விட்டு விட்டு நல்ல மழை பெய்துள்ளது.
40 ஆண்டுகளுக்கு முன்புதான் கோடை காலத்தில் இப்படி கன மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. அதன் பிறகு ஏப்ரல் மாதம் இப்படி கன மழை பெய்துள்ளது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
குமரியில் மின்னல் தாக்கி 2 பேர் சாவு:
கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் பெய்து வந்த அடைமழை ஓய்ந்த நிலையில் மீண்டும் மழை கொட்டி வருகிறது. திடீரென மேகமூட்டம் திரண்டு இடிமின்னலுடன் பலத்த மழை பெய்ததால் நாகர்கோவில் ரோடுகளில் வெள்ளம் பாய்ந்து தண்ணீர் தேங்கியது.
நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள ஸ்ரீகண்டசாஸ்தா கோயில், அழகம்மன் கோயில் பாதுகாப்பு அறையின் கூரை மழையால் இடிந்து விழுந்தது. இதனால் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திடீர் மழையால் குலசேகரம் பகுதியில் பல இடங்களில் மின்னல் தாக்கியது. குலசேகரம் நாகக்கோடு அம்பலத்து விளை என்ற இடத்தை சேர்ந்த ஏசுராஜன் மாலை டிவி பார்ப்பதற்காக சுவிட்சை போட்டார். அப்போது தீடீரென மின்னல் தாக்கியதால் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.
குலசேகரத்தை அடுத்த கரும்பாலிவிளையை சேர்ந்த நாகேந்திரன் என்ற கூலி தொழிலாளியும் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
மின்னல் தாக்கியதால் நாகக்கோடு அம்பலத்துவிளையைச் சேர்ந்த அனிதா, ஆசிர்வாதம், சஜிலா ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications