1000 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 2 பேர் கைது
சங்கரன்கோவில்: நெல்லை அருகே ஆயிரம் ரூபாய் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 43,000 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோவில், திருவேங்கடம், புளியங்குடி ஆகிய பகுதிகளில் கள்ள நோட்டுகள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் சங்கரன்கோவில் பஜாரில் ஒரு கடையில் கள்ளநோட்டை மாற்ற முயன்றதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அந்த கடைக்கு விரைந்து சென்ற போலீசார் புகார் தெரிவிக்கப்பட்ட 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்களை சோதனையிட்டதில் கைப்பையில் மறைத்து வைத்திருந்த கள்ளநோட்டுகளை கண்டுபிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் செங்கோட்டை அருகே பண்பொழியை சேர்ந்த ஜான், திருவேங்கடத்தை சேர்ந்த அசன் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 43,000 ரூபாய் மதிப்பிலான 1000 மற்றும் 100 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கள்ளநோட்டு அச்சடித்து தரும் கேரள கும்பலைப் பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications