சென்னை மயானங்களில் இன்று முதல் இலவச தகனம்!
சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மயானங்களில் இன்று முதல் இறந்தவர்களின் உடல்களைப் புதைப்பதற்கும், எரிப்பதற்கும் கட்டணம் வசூலிக்கப்படாது என்று மாநகராட்சி மேயர் மா.சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமாக 38 மயானங்கள் உள்ளன.
இங்கு இறந்தவர்களின் உடல்களைப் புதைப்பதற்கு ரூ. 250, தகனம் செய்வதற்கு ரூ. 650 (விறகு, வறட்டிக்கு தனி கட்டணம்), மின்சார மயானத்தில் தகனம் செய்ய ரூ. 250 என கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
ஆனால் இந்த கட்டணம் வசூலிப்பதில் மயான பொறுப்பாளர்கள் பெருமளவில் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், அதிக கட்டணம் கேட்டு இறந்தவர்களின் உறவினர்களை நிர்ப்பந்திப்பதாகவும் சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து கடந்த மாதம் நடந்த மாநகராட்சி மன்றக் கூட்டத்தில், இனிமேல் மாநகராட்சி மயானங்களில் உடல்களைப் புதைப்பதற்கும், எரிப்பதற்கும் கட்டணம் வசூலிக்கப்படாது என்று மேயர் மா.சுப்ரமணியம் அறிவித்தார்.
இன்று முதல் அந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள மயானத்தில் இந்த புதிய முறையை இன்று மேயர் மா.சுப்ரமணியம் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து மா.சுப்ரமணியம் கூறுகையில், மாநகராட்சிக்குச் சொந்தமான மயானங்களில் இனிமேல் உடல்களைப் புதைப்பதற்கும், எரிப்பதற்கும் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது. அனைத்தும் இனிமேல் இலவசமாக செய்யப்படும்.
தகனம் செய்வது, புதைப்பது உள்ளிட்டவற்றுக்கு ஆகும் செலவினை இனிமேல் மாநகராட்சியே பார்த்துக் கொள்ளும் என்று தெரிவித்தார்
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications