+2 விடைத்தாள்: டம்மி எண் குளறுபடியால் கல்வி அதிகாரி மாற்றம்
திருச்சி: பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் டம்மி எண் வழங்குவதில் குளறுபடி செய்ததால் திருச்சி மாவட்ட முதன்மை அதிகாரி பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட பிளஸ்-2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி புனித வளனார் கல்லூரி மேல்நிலை பள்ளி மற்றும் பெரியார் மணியம்மை மேல்நிலை பள்ளிகளில் நடந்து வருகிறது. இதில், புனித வளனார் கல்லூரி மேல்நிலை பள்ளி மைய தலைமை அலுவலராக திருச்சி முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதன் நியமிக்கப்பட்டிருந்தார்.
விடைத் தாள்களை திருத்த ஆசிரியர்களிடம் வழங்கும்போது முறைகேடு நடக்காமல் தடுக்க டம்மி எண்களை வழங்குவது வழக்கம். அந்தந்த மையத்தின் தலைமை அலுவலர்கள்தான் இந்த எண்களை வழங்கவேண்டும்.
ஆனால், புனித வளனார் கல்லூரி மேல்நிலை பள்ளி மையத்தில் விடைத்தாள்களுக்கு வழங்கப்பட்ட டம்மி எண்களில் குளறுபடி ஏற்பட்டது.
அதிகாரி சுவாமிநாதனின் அனுபவமின்மை காரணமாக இந்த குளறுபடி நடந்ததாக தெரிகிறது.
இதையடுத்து அந்த பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நியமிக்கப்பட்டார்.
இதன்பிறகு விடைத்தாள் திருத்தும் பணி தொடர்ந்தது.
-
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications