6வது ஊதிய குழு பரிந்துரையை ஆராய குழு
டெல்லி: ஆறாவது ஊதிய குழுவின் பரிந்துரையால் ராணுவம், பொதுத்துறை அதிகாரிகள் பெரும் அதிருப்தியடைந்துள்ளதால் இந்த பரிந்துரைகளை ஆராய உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
மத்திய பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், அதிகாரிகள், முப்படை அதிகாரிகள், வீரர்களின் சம்பளத்தை உயர்த்த திட்டிமிடப்பட்டது. இதற்காக நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான 6வது ஊதியக் குழுவை மத்திய அரசு கடந்த 2006ம் ஆண்டு அமைத்தது. இந்த கமிஷன் தனது அறிக்கையை கடந்த மாதம் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
இதன்படி சராசரியாக அனைத்து அதிகாரிகள், அலுவலர்களுக்கு 40 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது. இது ராணுவத்தினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து முப்படை அதிகாரிகள் பலர் ராஜினாமா செய்துள்ளனர்.
6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கக் கூடாது என்றும் மீறினால் காலவரையற்ற போராட்டம் நடத்துவோம் என்றும் பல்வேறு ஊழியர் தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன.
மேலும் ரயில்வே ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கப் போவதாக மிரட்டி வருகின்றனர்.
இதையடுத்து பிரதமர் மன்மோகன் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடுக்க்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் கபில்சிபில் கூறியதாவது,
ஊதியக் குழுவின் ஏற்றத் தாழ்வுகளை களையவும், பரிந்துரையை ஆராயவும் உயர்நிலைக்குழு ஏற்படுத்தப்படும். இக்குழுவின் தலைவராக அமைச்சரவைச் செயலாளர் கே.எம்.சந்திரசேகர் நியமிக்கப்படுவார்.
இந்த குழு அளிக்கும் பரிந்துரைகளை ஆராய்ந்து மத்திய அமைச்சரவை விரைவில் அமல்படுத்தும்.
மேலும் முப்படையினர், போலீஸ் ஐபிஎஸ் அதிகாரிகளின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றை களைவது குறித்து ஆராய மத்திய நிதித்துறை செயலாளர் சுப்பாராவ் தலைமையில் ஏற்கனவே உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடையே உள்ள சம்பள வேறுபாடுகளை நீக்குவது குறித்தும் ஆராயப்படும் என்றார் சிபல்.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. 11 டூ 11 பார்களுக்கு செக்.. அரசு அதிரடி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications